தேசிய விருது பதக்கங்களை கேட்டில் தொங்கவிட்ட சென்ற திருட்டுக்கும்பல்

0 685

காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டனின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வீட்டிலிருந்து திருடப்பட்ட தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை அவரது வீட்டு வாசலில் மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளை கும்பல் கேட்டில் தொங்க விட்டு சென்றுள்ளது.

“அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி அவர் வீட்டில் இல்லாத போது நுழைந்த கொள்ளைக்கும்பல் விருது பதக்கங்களுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 5 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments