விவசாய சங்கத் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற்பு
மத்திய அரசுடன் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல்,அர்ஜூன் முண்டா உள்ளிட்டோர் முன்னிலையில் விவசாய சங்கத் தலைவர்கள் சண்டிகரில் நேற்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்பு டெல்லி முற்றுகைப் போராட்டத்தின்போது விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுதல், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டது.
ஆனால் நெல்லுக்கு அடிப்படை ஆதாரவிலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதனைப் பரிசீலிக்க ஒரு குழுவை அமைப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதை விவசாயிகள் ஏற்கவில்லை.
Comments