விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் உடலில் குத்திய 3 அடி நீள கம்பி.. அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவர்கள்..!
சுமார் மூன்றடி அடி நீளம், அரை அங்குலம் அகலமுள்ள கம்பியின் வளைந்தபாகம் உடலில் குத்திய நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கலலூரி மருத்துவமனைக்கு வந்த 16 வயது சிறுவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கம்பி அகற்றப்பட்டது.
இன்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கம்பி குத்தியதில் சிறுவனின் அக்குள் பகுதியில் சுமார் அரை அடி அளவு கம்பி உள்ளே இறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
Comments