அரசு தயாரித்த உரையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடந்தது என்ன ?
சட்டப்பேரவை
நான்கே நிமிடங்களில் உரையை முடித்தார் ஆளுநர்
அரசு தயாரித்த உரையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்
ஆளுநர் உரையை சபாநாயகர் தமிழில் வாசித்து வருகிறார்
தேசிய கீதம் இசைக்க வேண்டும் என பல முறை கூறினேன்: ஆளுநர்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தனது உரையை தமிழில் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பிணி இன்மை செல்வம்.. எனத் தொடங்கும் குறளை மேற்கோள்காட்டி உரை
தேசிய கீதத்தை நிகழ்ச்சியின் முதலிலும் இறுதியிலும் பாட வேண்டும்: ஆளுநர்
தொடங்கிய நான்கே நிமிடங்களில் உரையை முடித்தார் ஆளுநர்
ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட உரையை படிக்கவில்லை
அவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்துவதற்கு வாழ்த்துவதாக பேச்சு
ஆளுநர் உரையை தமிழில் அவையில் படித்து வருகிறார் சபாநாயகர்
சபாநாயகர் படிக்கும் போது அவருக்கு அருகே ஆளுநர் அமர்ந்துள்ளார்
ஆளுநர் வாசிக்காத மீதி பகுதியை தான் வாசிப்பதாக கூறி சபாநாயகர் படித்து வருகிறார்
உரையை வாசித்து வரும் சபாநாயகர் அருகே தனி இருக்கையில் ஆளுநர் அமர்ந்துள்ளார்
தொடக்கத்தில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என பல முறை கூறியுள்ளேன்: ஆளுநர்
இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகத்தின் வளர்ச்சி வேகம் அதிகம்: சபாநாயகர்
தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை: ஆளுநர்
உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன்: ஆளுநர்
மூன்றே நிமிடங்களில் உரையை முடித்தார் ஆளுநர்
அரசு தயாரித்த உரையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்
ஆளுநர் மறுப்பு - உரையை வாசிக்கும் சபாநாயகர்
உரையை வாசிக்கும் சபாநாயகர் - அருகில் அமர்ந்துள்ள ஆளுநர்
தேசிய கீதத்திற்கு அவையில் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என ஆளுநர் குற்றச்சாட்டு
தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துகளுடன் முரண்படுவதாக ஆளுநர் பேச்சு
அரசு தயாரித்த உரையில் இருந்த திருக்குறள் உள்ளிட்ட சில பகுதிகளை ஆளுநர் வாசித்தார்
வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக்கூறி உரையை முடித்தார் ஆளுநர்
அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும்: ஆளுநர்
அரசு தயாரித்த உரையின் உண்மைத்தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துகள் உள்ளன: ஆளுநர்
ஆளுநர் மறுப்பு - உரையை வாசிக்கும் சபாநாயகர்
உரையை வாசிக்கும் சபாநாயகர் - அருகில் அமர்ந்துள்ள ஆளுநர்
ஆளுநர் உரையை சபாநாயகர் தமிழில் வாசித்து வருகிறார்
இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகத்தின் வளர்ச்சி வேகம் அதிகம்: ஆளுநர் உரை
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது: ஆளுநர் உரை
சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்: ஆளுநர் உரை
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது: ஆளுநர் உரை
மெட்ரோ திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும்: ஆளுநர் உரை
உரையை வாசித்து வரும் சபாநாயகர் அருகே தனி இருக்கையில் ஆளுநர் அமர்ந்துள்ளார்
பணவீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது: ஆளுநர் உரை
இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது: ஆளுநர் உரை
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது: ஆளுநர் உரை
மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும்: ஆளுநர் உரை
இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஹெக்டேர் உயர்வு: ஆளுநர் உரை
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்துகிறது: ஆளுநர் உரை
இல்லம் தேடி கல்வி திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது; இதன் மூலம் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்
2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலனடைந்துள்ளனர்: ஆளுநர் உரை
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4,671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: ஆளுநர் உரை
அவையில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய கீதம் வாசிக்கப்படும் முன் அவையில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
தமது உரையின் தமிழாக்கம் படித்து முடிக்கும் வரை காத்திருந்த ஆளுநர் சபாநாயகர் படித்து முடித்ததும் புறப்பட்டார்
தேசிய கீதம் மரபு என்ன? - சபாநாயகர் விளக்கம்
முதலில் தமிழ் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் வாசிக்கப்படுவதே மரபு: சபாநாயகர்
தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக ஏற்கனவே ஆளுநரிடம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது: சபாநாயகர்
ஆளுநர் குறைவாக வாசித்ததை குறையாக கருதவில்லை: சபாநாயகர்
ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாக நான் கருதவில்லை: சபாநாயகர்
எல்லோருக்கும் பல கருத்துக்கள் உள்ளது அதனை இந்த சபையில் பேசுவது சரியல்ல: சபாநாயகர்
அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சட்டப்படி ஆளுநரின் கடமையாகும்: சபாநாயகர்
ஆளுநர் உரை - தீர்மானம் நிறைவேற்றம்
அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவையில் வழங்கப்பட்டபடியே அவைக்குறிப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும்: துரைமுருகன்
அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு
Comments