பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது.
ஸ்திரத்தன்மையற்ற சூழலில் இருந்து பாகிஸ்தானைக் காப்பாற்ற, கூட்டணி அரசு அமைக்க நவாஸ் ஷெரீப்பின் PML கட்சியும் பிலாவல் பூட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளன.
கூட்டணி அரசுக்கான செயல்பாடுகளை கவனிக்குமாறு நவாஸ் ஷெரீப் தமது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்பைக் கேட்டுக் கொண்டுள்ளார். ஷெரீப்பும் பிலாவலும் லாகூரிலும் இஸ்லாமாபாத்திலும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இதனிடையே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள இம்ரான் கானின் கட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
Comments