குரங்குக் காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக-கர்நாடக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
தமிழ்நாட்டில் குரங்குக் காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கர்நாடக எல்லயை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மருத்துவப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வனப்பகுதியில் குரங்குகள் இறப்பு குறித்து கண்காணித்து வருவதாகவும் மற்றும் வனப்பகுதியில் வன அலுவலர்கள் பாதுகாப்பு உடை அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments