சேலத்தில் வெள்ளி வியாபாரியை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கடந்த 2ஆம் தேதி வெள்ளி வியாபாரி சங்கர் என்பவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது தங்கையின் கணவர் சுபாஷ்பாபு என்பவரே கூலிப்படையை ஏவிக் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுபாஷ்பாபுவின் மனைவி கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து சகோதரர் சங்கர் வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார். மனைவியையும் மகன்களையும் பார்க்கவிடாததால், சங்கரை கொன்றதாக சுபாஷ்பாபு வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கொலை தொடர்பாக திமுக பிரமுகர் அப்துல் முனாப், வேலாயுதம், தங்கராசு, பிரதாப் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments