பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இல்லை - எடப்பாடி பழனிசாமி

0 520

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், உரிய நேரத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறினார்.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை ஒதுக்க திமுக மறுக்கிறது என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்குள் திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கும் என்பது தெரியாது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, திமுக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments