எனக்கு 24 வயசுதான்... அவனுக்கு 57 வயசாகுது.. அல்டாப் அமெரிக்க மாப்பிள்ளை..! சாலையில் பெண் கதறல் பின்னணி

0 1952

சேலத்தில் போலீஸ் வாகனத்தை மறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்ணை, பெண் எஸ்.ஐ. ஒருவர் இழுத்துச்சென்று அப்புறப்படுத்தினார். 2வது திருமணம் செய்த அமெரிக்க மாப்பிள்ளை கைவிட்டதாக கூறி பெண் வீதியில் இறங்கி போராடிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

எனக்கு அவரு பொண்ணு வயசு தான் ஆகிறது.. அவருக்கு 57 வயசாகுது.. ஆனால் 40 வயசுன்னு பொய் சொல்லி ஏமாற்றி 2 வது திருமணம் செஞ்சிகிட்டார். அவரை போலீசார் காப்பாற்றி அழைச்சிட்டு போறாங்க என்று போலீஸ் வாகனத்தை மறித்து சாலையில் அமர்ந்து தர்ணா செய்த பெண் இவர் தான்..!

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனது மகள் ஆர்த்தியை ஆறு வருடங்களுக்கு முன்பு கண்ணன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆர்த்தியின் கணவர் கண்ணன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அமெரிக்காவாழ் இந்தியரான பாஸ்கர் என்பவருடன் ஆர்த்திக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி 2 வது திருமணம் நடந்தது.

இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் தங்கள் புது மண வாழ்க்கைக்கு ஆர்த்தியின் முதல் கணவருக்கு பிறந்த இரு ஆண் குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக கூறி ஆர்த்தியுடன் பாஸ்கர் சண்டையிட்டதாக கூறப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் காரில் சென்ற போது இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாஸ்கர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் காரில் இருந்து இறக்கி நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

கணவர் தவிக்கவிட்டு சென்றது குறித்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த ஆர்த்தி அவருக்கு சொந்தமான ஓட்டலுக்கு நியாயம் கேட்க சென்றதால் இரு வருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி உள்ளது.

இதையடுத்து பாஸ்கர் அழைப்பின் பேரில் வந்த வழக்கறிஞர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் பாஸ்கரனை பத்திரமாக தங்கள் வாகனத்தில் ஏற்றி அழைத்துச்செல்ல முயன்றாதால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்

போலீஸ் வாகனத்தை தடுத்து மறியலில் ஈடுபட்ட அவர், பாஸ்கருக்கு தன்னுடைய வயதில் இரு மகள்கள் இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, தன்னை கடுமையாக சித்ரவதை செய்ததாகவும் கத்தி கூச்சலிட்டார்

போலீசாரின் வாகனத்தை செல்ல விடாமல் தடுத்த நிலையில் அங்கு வந்த பெண் உதவி ஆய்வாளர் ஆர்த்தியின் சகோதரியை பிடித்து தள்ள அவர் தன்னை போலீஸ் கொல்வதாக உரக்க கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

அதனை தொடந்து ஆர்த்தியையும் பிடித்து இழுத்து அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் அப்புறப்படுத்தினார். தனது கணவர் பாஸ்கர் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்திருக்கும் நிலையில், போலீசார் தன்னை விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு வருமாரு மிரட்டுவதாக குற்றஞ்சட்டினார்

இருவருக்குமே இது 2 வது திருமணம் என்று தெரிவித்த போலீசார் , தனது புது மனைவியின் குடும்பத்தினர் தன்னை தாக்கும் நோக்கில் வந்திருப்பதாக பாஸ்கர் , தங்களுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையிலேயே அவரை காப்பாற்றி அழைத்து வந்ததாகவும் இருவரது புகார் குறித்தும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments