வரும் ஞாயிறன்று தை மாத கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.3,000-த்திற்கு விற்பனை
ஞாயிறன்று தை மாத கடைசி வளர்பிறை முகூர்த்தம் வருவதை முன்னிட்டு திண்டுக்கல் சந்தையில் கடந்த வாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப் பூ 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில், ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப் பூ 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் பிச்சிப் பூ 2500 ரூபாய்க்கும் விற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், காலையில் பனியின் தாக்கம், மதியம் வெயிலின் தாக்கத்தால் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளதாக தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் பூ விவசாயிகள் தெரிவித்தனர்.
Comments