கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

0 509

கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி, ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் உள்ள பக்ருதீன் அலி அகமது என்பவரது சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையில் காஜிமார் தெருவில் வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்த முகமது அபுதாஹிர் இப்ராகிம் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் அல் அமீன் காலனியில் ஏசி மெக்கானிக் ரகுமான் என்பவரின் வீடு உள்பட 12 இடங்களில் அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் சுல்தான் என்பவரிடம் அவரது செல்போனுக்கு வந்த வெளிநாட்டு அழைப்புகள் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

திருச்சி, பீமநகரில் அஷ்ரப் அலி என்பவரின் வீட்டில் மூன்று பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments