கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொது மக்கள் சாலை மறியல்

0 546

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல குடும்பத்துடன் கிளாம்பாக்கத்துக்குச் சென்ற மக்கள், போதுமான பேருந்துகள் இல்லாததால் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்துகிடப்பதாக தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மக்கள், சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பெருங்களத்தூர் வரை வாகனங்கள் நகர முடியாத சூழல் ஏற்பட்டது. போலீசார் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments