அண்ணன் ஓங்கி அடிச்சா ... ஒன்ற டன் வெயிட்டுல.. அலர்ட்டான அனிதா ராதாகிருஷ்ணன்..! பாதுகாவலருக்கே பாதுகாப்பில்லையா..?

0 1089

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு கால்நடை மருந்தகத்திற்கு ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், கோப்புகளை வாங்கிப் பார்க்குமாறு கூறிய பாதுகாவலரை அமைச்சர் அடிக்க கை ஓங்கிவிட்டு மீடியாக்கள் வீடியோ எடுப்பதை கண்டதும் உஷாராகி சிரித்து சமாளித்தார்

ஆய்வுக்கு சென்ற அமைச்சரை பார்த்து கோப்புகளை வாங்கி சரி பார்க்கச்சொன்ன கோபம் வராதா... அதான் அட்வைஸ் பன்ன பாதுகாவலரை நோக்கி கையை ஓங்கினார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர் வழியில் இருந்த கால்நடை மருந்தகத்திற்குள் திடீரென்று நுழைந்தார். அவர் வருவதை சற்றும் எதிர்பாராமல் பதற்றத்தில் நின்ற கால்நடை மருத்துவரிடம்,கால்நடை மருந்தகத்தை பராமரிப்பில்லாமல் வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

சீரியசாக பேசிக் கொண்டிருந்த அமைச்சரிடம், அருகில் சபாரி உடையுடன் நின்ற பாதுகாவலர், அண்ணே கோப்புகளை வாங்கி பாருங்க... என்று எடுத்துக் கொடுத்ததால் டென்சனான அமைச்சர், பாதுகாவலரை நோக்கி உனக்கு ஒன்னு போடனும்ன்னு கையை ஓங்கினார். மீடியாக்கள் வீடியோ எடுப்பதை அறிந்து உஷாராகி சிரித்துக் கொண்டே அடிக்காமல் மருத்துவர் பக்கம் திரும்பினார்.

மருத்துவருக்கு அறிவுரை கூறி கிளம்பிய அமைச்சரை பின் தொடர்ந்த அந்த மருத்துவர், குடும்பத்தை பிரிந்து பணி செய்வதாக கூறி இடமாறுதல் கேட்க, செய்து தருவதாக சிரித்தவாறே கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச்சென்றார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments