கோவையில் ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் இயங்கக்கூடிய 12 கேமராக்கள் அமைப்பு
ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க கோவை மாவட்டம் எட்டிமடை-வாளையாறு ரயில் பாதையில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் இயங்கக்கூடிய 12 கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன.
500 மீட்டர் இடைவெளிக்கு ஒரு கோபுரம் வீதம் 12 உயர் கோபுரங்கள் அமைத்து, அதில் பொருத்தப்பட்ட இந்த ஏ.ஐ. கேமராக்கள், வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, கட்டுபாட்டு மையத்துக்கு புகைப்படங்களையும், வீடியோகளையும் அனுப்பும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதனுடன் யானைகளை விரட்டும் அதிநவீன ட்ரோன் கேமராவும் பயன்படுத்தப்பட உள்ளது. ஏழேகால் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
Comments