பாகிஸ்தான் தேர்தலில் தமது கட்சியின் ஆதரவு பெற்ற 125 வேட்பாளர்கள் முன்னிலை - இம்ரான் கான்

0 688

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 266 இடங்களில் 125 தொகுதிகளுக்கு மேல் தமது PTI கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னணியில் இருப்பதாக சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், ஆளும் நவாஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பதாகவும் எத்தனை தடைகள் ஏற்படுத்தியும் மக்கள் தமக்கு ஆதரவளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை தொடங்கி 14 மணி நேரமாகியும் வெறும் 6 தொகுதிகளின் முன்னணி நிலவரத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தங்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னணி பெற்றதால் வாக்கு எண்ணிக்கையை உள்துறை அமைச்சகம் தலையிட்டு நிறுத்தி வைத்திருப்பதாக இம்ரான் கான் தரப்பினர் குற்றம்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments