தை அமாவாசையையொட்டி கோயில்கள் மற்றும் நீர்நிலைகளில் திரளான மக்கள் குவிந்து புனித நீராடி, முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் கொடுத்து தர்ப்பணம்
தை அமாவாசையையொட்டி கோயில்கள் மற்றும் நீர்நிலைகளில் திரளான மக்கள் குவிந்து புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய மக்கள், எள்ளு பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரியில் குவிந்த மக்கள் முக்கூடல் சங்கமத்தில் புனித நீராடியபிறகு, கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடலில் திரளான மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பிறகு, சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் காவிரி தீர்த்தத்தில் புனித நீராடிய பொதுமக்கள், ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்து வழிபட்டனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிக் கரைகளில் அதிகாலை முதல் திரளான மக்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தஞ்சாவூர், திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் காய்கறிகள், கீரை, பச்சரிசி எள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
Comments