உத்தரகாண்டில் மதரசா கட்டடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு, 250 காயம்
உத்தரகாண்டில் மதரசா கட்டடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஹல்த்வானி பகுதியில் காவல்நிலையம் அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரசா கட்டடத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அகற்றச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி வன்முறை வெடித்தது. சிலர் கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீவைத்ததால் பதற்றம் நிலவியது.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிப்பதால், அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பிறப்பித்துள்ளார்.
வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, இணைய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Comments