இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்ப உள்ளது : இஸ்ரோ

0 530

இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து அன்று மாலை 5.30 மணிக்கு ராக்கெட்டை ஏவ ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது.

இதில் உள்ள 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள், புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைத் தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும்.

வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக  ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இன்சாட் 3DS அனுப்பப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments