சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு போலீசார் தீவிர சோதனை

0 1964

சென்னையில் இ-மெயில் மூலம் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

குறிப்பிட்ட ஒரு ஐ.பி முகவரியில் இருந்து இ-மெயில் மூலம் பள்ளிகளுக்கு மிரட்டல் என போலீஸ் விசாரணையில் தகவல்

அண்ணாநகர், முகப்பேர், திருமழிசையில், ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

பாரிமுனையில் செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை

மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி உட்பட பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி உள்ளிட்ட பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்

பெற்றோர், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் - சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள்

சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் செல்லுமாறு, வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் மூலம் தகவல்

வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடைபெற்று வருகிறது - காவல்துறை

வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் குழுவினர் அனைத்து பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டு வருவதாக போலீசார் விளக்கம்

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி - தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் மூலமாகவும், சென்னை மாவட்ட கல்வித்துறை சார்பிலும் காவல்துறையில் புகார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments