190 ரூபாய் பொருள் 3,900 ரூபாயாம் இதுதான் MyV3 ads ரகசியமாம்..! 10-வது பெயிலானவரின் மருந்துகள்..! 10 பேர் புதியதாக அளித்த புகார்

0 1280

MyV3 ads நிறுவனம் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில்  10ஆம் வகுப்பு பெயிலானவரின் கம்பெனி தயாரிக்கும் மருந்துப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கும் சக்தி ஆனந்தன், உறுப்பினர்களை ஏமாற்றி 20 மடங்கு விலையில் விற்றுப் பணம் குவிப்பதாக போலீசாரிடம் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது

விளம்பரம் பார்த்தால் பணம் தருவதாகவும், ஆயுர்வேத பொருட்களை விற்றால் கமிஷன் என்றும் முதலீடு பெற்று மோசடி செய்ததாக MyV3 ads நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மீது கோவை மாநகர குற்ற பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். சக்தி ஆனந்தன் 2 வருடங்களுக்கு முன்பு நிர்வாகியாக இருந்த V3Online tv என்ற நிறுவனம் மூலம் 1000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். எற்கனவே புகார் அளித்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் அவர்களை அழைத்து வந்திருந்தார்

அப்போது பேசிய அசோக் ஸ்ரீநிதி, MyV3 Ads நிறுவனம் இதனை துவங்கும் முன்னர் V3Online TV என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளதாகவும் சக்தி ஆனந்தன், மற்றும் விஜய ராகவன் ஆகியோர் அந்நிறுவனத்தை நடத்தி உறுதியாக மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த MyV3 Ads நிறுவனத்திற்கு V ஹெர்பல் கேர் என்ற நிறுவனம் தான் மருந்துகளை தருவதாக குறிப்பிட்ட அசோக் ஸ்ரீநிதி இதன் நிறுவனரும் பாரத் சேவக் சமாஜ் என்ற மத்திய அரசின் அமைப்பின் சேன்ஸ்லரும் ஒரே நபர் என்றும் அவர் பத்தாம் வகுப்பில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறாதவர் எனவும் கூறினார். குறிப்பாக 190 ரூபாய் பொருளை 3900 ரூபாய் என்ற 20 மடங்கு விலைக்கு உறுப்பினர்களுக்கு விற்று ஏமாற்றிவருவதாக சுட்டிக்காட்டினார்

V3 Online TV மூல மோசடி செய்த பணத்தில் தான் MyV3 Ads நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அசோக் ஸ்ரீநிதி தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments