துப்பாக்கி முனையில் போலீசாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கருப்பின பெண்கள் 4 சிறுமிகள் உள்பட 5 கருப்பின பெண்களுக்கு சுமார் ரூ.16 கோடி இழப்பீடு
அமெரிக்காவில், துப்பாக்கி முனையில் போலீசாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கருப்பின பெண்களுக்கு சுமார் 16 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆரோரா நகரை சேர்ந்த பிரிட்னி கில்லியம் தனது 6 வயது மகள் மற்றும் உறவுக்கார சிறுமிகள் 3 பேருடன் கடந்த 2020 ஆம் ஆண்டு காரில் சென்றதாக கூறப்படுகிறது.
திருடு போனதாக புகாரளிக்கப்பட்ட காரில் அவர் பயணிப்பதாக நினைத்து காரை நிறுத்திய போலீசார், 6 வயது சிறுமி உள்பட அனைவரையும் துப்பாக்கி முனையில் தார் சாலையில் குப்புற படுக்கச்செய்து கைகளுக்கு விலங்கிட்டனர்.
திருட்டு கார் இல்லை என தெரியவந்ததும் போலீசார் அவர்களை விடுவித்தனர்.
நிறவெறி தாக்குதலுக்கு உள்ளானதாக கில்லியம் தொடர்ந்த வழக்கில் 16 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
Comments