இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல விசா தேவையில்லை, 15 நாட்கள் ஈரானில் தங்கியிருந்து சுற்றிப்பார்க்கலாம்
வியட்நாம், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என ஈரான் அரசும் அறிவித்துள்ளது.
15 நாட்களை வரை ஈரானில் தங்கியிருந்து சுற்றிப்பார்க்க பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும், 15 நாட்களுக்கு மேல் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக விசா எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments