திருச்சி மாநாட்டிற்கு நிதி வசூலித்ததில் முறைகேடு என மோதலில் ஈடுபட்ட வி.சி.கவினர்

0 622

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்காக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் 15 லட்சம் ரூபாய் வரையில் வசூல் செய்து முறைகேடு நடைபெற்றதாகக் கூறி கட்சியினர் இரு பிரிவாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகிலேயே இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் போலீஸார் தலையிட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தன்னையும் தனது ஆதரவாளர்கள் 3 பேரையும் தாக்கியதாக மாவட்ட செயலாளர் வேல்பழனியம்மாள் தரப்பிலும் மற்றும் ஒன்றிய செயலாளர் தரப்பிலும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments