பாரத் அரிசியை அறிமுகம் செய்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்து வைத்தார். அரிசி விலையில் கடந்த ஆண்டு 15 சதவீதம் அதிகரித்ததால் பயனாளர்களின் சுமையைக் குறைக்க நியாயவிலையில் பாரத் அரிசி விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு கிலோ பாரத் அரிசியிலும் 5 சதவீதம் உடைந்த அரிசி கலக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.தக்காளி வெங்காயம் போன்றவற்றின் விலையும் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்த பியூஷ் கோயல் பாரத் கோதுமை மாவு அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து கோதுமை விலை கட்டுக்குள் இருப்பதாக கூறினார்.
பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி மூட்டைகளை விற்பனை செய்யும் 100 வாகனங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.இணைய வர்த்தகம் வழியாகவும் பாரத் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.
Comments