உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரங்களில் நெல், உளுந்து அறுவடை தீவிரம்..

0 448

விடுமுறை நாட்களை அடுத்து இன்று ஒரே நாளில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டதால், இட நெருக்கடி ஏற்பட்டு, அடுத்த 2 நாட்களுக்கு உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், கடந்த 2 வாரங்களாக நெல் மற்றும் உளுந்து அறுவடை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

தினமும் சுமார் 7 ஆயிரம் தானிய மூட்டைகள் வந்த நிலையில், இன்று மட்டுமே 12 ஆயிரம் மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்ததால் ஏற்பட்ட  இடநெருக்கடியை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments