2023 சாலை விபத்துகள்: கோவையில் அதிக உயிரிழப்புகள்

0 624

தமிழகத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் கோவையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சென்னை மற்றும் கோவையில் ஒரே எண்ணிக்கையில் 3,642 விபத்துகள் நேரிட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் 1,040 பேரும் சென்னையில் 500 பேரும் உயிரிழந்தனர்.

கோவையுடன் ஒப்பிடுகையில் சென்னையில் உயிரிழப்பு குறைய, விரைவாக அவசர கால சிகிகிச்சை கிடைப்பதே காரணமாக கூறப்படுகிறது. கோவையின் புறநகர் பகுதிகளிலேயே அதிக விபத்துகள் நடைபெற்றிருப்பதும் அங்கு அவசர கால சிகிச்சை வசதி இல்லாததும் தெரிய வந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,387 விபத்துகளில் 912 பேரும் மதுரை மாவட்டத்தில் 2,642 விபத்துகளில் 876 பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments