மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் மழையினால் சேதமடைந்த உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட தானிய பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதவில்லை எனவும், விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஈரப்பதத்தை காரணம் காட்டி இடைத்தரகர்கள் தானியங்களை குறைந்து விலைக்கு கேட்பதால், டெல்டா மாவட்டங்களை போல், அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments