கோவை லுலு மாலில் அழுகிய சிக்கன் விற்பனை நடவடிக்கை எடுக்கப்படுமா ? பெரிய கடைன்னா கண்டுக்கறதில்ல..

0 690

கோயம்புத்தூர் லூலூ மால் என்ற சர்வதேச சூப்பர் மார்க்கெட்டில் அழுகிய சிக்கன் விற்கப்பட்டதாக உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் சர்வதேச சூப்பர் மார்க்கெட்டான லூலூ மால் உள்ளது.

இங்கு மளிகை, காய்கறி, துணிகள், பேண்ஸி, வீட்டு உபயோக பொருட்கள், சிக்கன் மட்டன், மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சூப்பர் மார்க்கெட்டில் பிரம்மாண்ட பார்க்கிங் உடன் தினமும் ஆஃபர், தள்ளுபடி என்று வாடிக்கையாளர்களை கவரும் விதமான வியாபார வித்தைகளை செய்து வருவதால் ஏராளமான மக்கள் இங்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கணேஷ் லால் என்பவர் லூலூ மாலுக்கு பொருள் வாங்க சென்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் 165 ரூபாய் கொடுத்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட முக்கால் கிலோ கோழி இறைச்சி வாங்கிச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்று கோழி இறைச்சியை எடுத்து பார்த்த போது துர நாற்றம் வீசி உள்ளது . அதனை ஆய்வு செய்த போது கோழி இறைச்சி அழுகி போயிருப்பதை கண்டு கணேஷ் லால் நொந்து போனதாகவும், சர்வதேச சூப்பர் மார்க்கெட் என்று நம்பி வாங்கினால் தரமற்ற அழுகிய் கோழி இறைச்சியை எப்படி கொடுப்பீர்கள் என்று லூலூ மால் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.

அதற்கு அங்கு பணியில் இருந்தவர்கள் பொருட்கள் வங்கும் போது நீங்கள் தான் பார்த்து வாங்கிச்செல்ல வேண்டும் என்று எகத்தாளம் பேசியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனக்கு தரமற்ற சிக்கனை விற்பனை செய்த லூலூ மால் சூப்பர் மார்க்கெட் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கணேஷ்லால் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்

சிறிய கடைகளுக்குள் புகுந்து மொத்த இறைச்சியையும் கைப்பற்றி அழிக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் புகாரை கிடப்பில் போட்டு விட்டதாக கணேஷ் லால் குற்றஞ்சாட்டினார்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த லூலூ மால் மார்கெட்டிங் மேலாளர் நவ்நீத் கூறும்போது, தினமும் அதிகாலை 3 மணிக்கே சிக்கன் வந்து விடும் என்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 45 கிலோ சிக்கன் விற்றதாகவும், எவரிடம் இருந்தும் புகார் வராத நிலையில் கணேஷ் லாலுக்கு மட்டும் எப்படியோ அழுகிய சிக்கன் பாக்கெட் சென்றுள்ளது என்றும், அதற்கு பதிலாக வேறு சிக்கன் தருவதாக கூறியும் அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து விட்டதாகவும், இதனை பெரிது படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments