இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு வேறொரு லாரியுடன் போலீசில் சரணடைந்த ஓட்டுனர்
கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய லாரிக்குப் பதிலாக வேறொரு லாரியின் சக்கரத்தில் கோழியின் ரத்தத்தைத் தடவி, காவல் நிலையம் சென்று சரணடைந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை இரவு தோட்டியோடு பகுதியில் இந்த விபத்து அரங்கேறியது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், ரத்தக்கறை படிந்த டயருடன் லாரியைக் கொண்டு வந்து இரணியல் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ஆனால் சிசிடிவியில் பதிவான லாரியும் அவர் எடுத்து வந்த லாரியும் வேறு வேறாக இருந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய லாரிக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வேறு லாரியின் டயரில் கோழி ரத்தத்தைத் தடவி கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து ஓட்டுநர் மில்டனையும் லாரியின் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments