யானை உடன் மடாதிபதியை துலாபாரத்தில் நிறுத்தி காணிக்கை

0 700

கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் ஷிரஹட்டி ஃபக்கீரேஸ்வரர் மடத்தில், யானையுடன் மடாதிபதியை துலாபாரத்தில் நிறுத்தி, எடைக்கு எடையாக 5 டன் நாணயங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.

மடாதிபதி ஃபகிரா சித்தராம சுவாமியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராட்சத எடை எந்திரத்தில், 200 கிலோ தேக்கு அம்பாரியை சுமந்தபடி நின்ற யானை மீது மடாதிபதியை அமர வைத்து எடை போடப்பட்டது.

மொத்த எடை ஐயாயிரத்து 555 கிலோவாக இருந்த நிலையில், அதற்கு நிகராக பக்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டிருந்த 10 ரூபாய் நாணயங்கள் துலாபரத்தில் வைக்கப்பட்டன.

அவற்றின் மதிப்பு சுமார் 73 லட்ச ரூபாய் இருந்ததாகவும்,  ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக அதனை செலவிடப்போவதாகவும் மடத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments