மாரத்தானில் பங்கேற்க வந்த வீரர், வீராங்கனைகள் சாலைமறியல்.. போட்டிக்கான ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை என புகார்
தேனியில், மாவட்ட காவல்துறை மற்றும் பிரீக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமிக் இணைந்து நடத்திய மாரத்தானில் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை எனக் கூறி போட்டியில் பங்கேற்க வந்திருந்த 5 ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்-வீராங்கனைகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
போட்டியில் 250 பேருக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்து நுழைவுக் கட்டணமாக 300 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் குறைவான சைக்கிள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
குடிநீர், உணவு வசதி செய்து தரப்படாததோடு ஆம்புலன்ஸ் வசதி கூட செய்யப்படவில்லை என வீரர்-வீராங்கனைகள் கேள்வி எழுப்பியதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
பரிசாக வழங்குவதற்கு வைத்திருந்த சைக்கிள்களை சிலர் தூக்கிச் சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தன்னிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என தேனி எஸ்.பி சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
Comments