2 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் கேட்கிறது மதிமுக... "இந்த முறை மதிமுகவின் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்"

0 495

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் மற்றும் மதிமுக தரப்பில் அண்ணா அறிவாலயத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த முறை மதுரை,கோவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட்,  இம்முறை தென்காசி,கன்னியாகுமரி,நாகபட்டினம் ஆகியவற்றையும் சேர்த்து 5 தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது.  

திமுகவுடனான பேச்சுவார்த்தையில் இரண்டு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்டிருப்பதாக மதிமுக அவைத்தலைவர் அர்ஜூனராஜ் கூறினார்.

இதனிடையே மதிமுக கேட்கும் 2 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை என 3 இடங்களை தர திமுக தரப்பில் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments