4 வருடங்கள் கழித்து தொகுதி பக்கம் சென்ற திருவள்ளூர் காங் எம்.பி..! ராமர் கோயிலை அதானி திறந்ததாக புலம்பல்

0 823

வெள்ள பாதிப்பின் போது கூட தொகுதிக்கு வராத திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், 4 வருடங்கள் கழித்து தொகுதிக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராமர் கோவிலை அதானி திறந்து வைத்ததாகவும், மனைவியை பிரிந்து வாழும் அதானி ராமர் கோவிலை எப்படி திறந்து வைக்கலாம் என்றும் கேட்டு செய்தியாளர்களைக் குழப்பினார்

அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசும் இவர் தான் திருவள்ளுர் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள ரெயில்வே பாலத்தின் பூமி பூஜைக்கு வந்திருந்தார் காங்கிரஸ் எம்.பி.ஜெயக்குமார், வெள்ளம் வந்த போது கூட தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்காமல் கடந்த 4 ஆண்டுகளாக அமைதி காத்த ஜெயக்குமார், சில மாதங்களில் தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் அதானி துறைமுகத்திற்கு திடீர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், ஒன்றுமே தவறு செய்யாத.. என்று கூறிவிட்டு யாருப்பா அவருன்னு கேட்க , அருகில் இருந்தவர்  எடுத்துக் கொடுக்க.. ஜார்க்கண்டை சேர்ந்த அவர் , இவருக்கு சாதகமாக நடக்கலை என்பதற்காக அவரை மிக கேவலமாக அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்...

அப்படி ஒரு சிறுமனிதனை அசிங்கப்படுத்துகிற இந்த அதானி என்று தவறாக சொல்லி தலையை உதறிய ஜெயக்குமார் ... தவறை திருத்திக் கொண்டார்

தமிழக ஊடகங்களை எலிகள் என்றும் தேசிய ஊடகங்களை கொத்தடிமைகள் என்றும் கடுமையாக விமர்சித்தார் எம்.பி ஜெயக்குமார்

ராமர் கோவிலை அதானி திறந்து வைத்ததையும், சாமி குப்பிட்டதையும் ஊடகங்கள் போட்டி போட்டு ஒளிபரப்பியதாகவும், ராமர் கோவிலை திறந்து வைக்க அதானிக்கு என்ன தகுதி இருக்கின்றது ?

அதானி மட்டும் தான் சாமி குப்பிட்டாரா ?மனைவியை பிரிந்த அதானி ராமர் கோவிலை திறந்து வைத்ததை அந்த ராமன் மன்னிக்க மாட்டான் என்று இந்து மதத்தலைவர்கள் கூறியதாகவும்..

தனது வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளிவிட்டார் ஜெயக்குமார், இடை மறித்த செய்தியாளர் , அய்யா..அது அதானி கிடையாது என்று தவறை சுட்டிக்காட்டியதும், தான் தவறாக சொன்ன கருத்துக்கு... சொன்ன இடத்திலேயே மன்னிப்புக்கேட்டார் ஜெயக்குமார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments