நடுவுல கொஞ்சம் நடிகை பிரியங்கா மோகனை காணோம் ரூ 3.5 கோடி முதலீடு போச்சி..! தயாரிப்பாளர் தவிப்புக்கு என்ன காரணம் ?

0 927

டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகனை வைத்து தயாரித்த டிக்டாக் படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகளை நீக்கியதால், படம் ஓடாமல் போனதாகவும், மூன்றரை கோடி ரூபாய்  நஷ்டம் அடைந்ததாகவும், படத்தின் தயாரிப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், அவை என்ன மாதிரியான காட்சிகள் என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

டாக்டர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா மோகன்.. டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லார் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவருகிறார்.

டாக்டர் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு பிரியங்கா மோகன், டிக்டாக் என்ற திகில் படத்தில் நடித்ததாக கூறப்படுகின்றது.

இந்த படத்தின் தயாரிப்பாளரான மதன குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், நடிகை பிரியங்கா மோகனை வைத்து டிக்டாக் என்ற படத்தை மூன்றரை கோடி ரூபாய் செலவில் தயாரித்ததாகவும், அதன் பின்னர் தான், அவர் மற்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார் என்றும், தனது படம் தாமதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரையரங்குகளில் வெளிட்டதாகவும் படத்தைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ள முக்கியமான 20 நிமிட காட்சிகள் திட்டமிட்டே தனக்கு தெரியாமல் நீக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் திரையரங்கில் தனது படம் ஓடவில்லை என்றும், தனக்கு மூன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணமான டி.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனம், அந்த நிறுவனத்தின் மாஸ்டரிங் என்ஜினியர் தினேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க் வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் மதனகுமாரிடம், அப்படி என்ன காட்சிகளை நீக்கி உள்ளனர் என்று போலீசார் விசாரித்த போது, பிரியங்கா மோகன், தனது படத்தில் படுக்கை அறை காட்சிகள், நெருக்கமான காதல் காட்சிகளுடன் கூடிய 2 பாடல் காட்சிகள் தற்போது படத்தில் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் டிக்டாக் படத்தில் தான் நடித்த கிளாமர் காட்சிகள் தற்போது வெளியானால், தனது ஃபேமிலி ஹீரோயின் இமேஜ் பாதிக்கும் என நினைத்து நடிகை பிரியங்கா மோகன் தரப்பில் பட வெளியீட்டு நிறுவனத்தை அணுகி அந்த காட்சிகளை நீக்கி இருக்கலாம் என்று தயாரிப்பாளர் சந்தேகிப்பதால் இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments