''பா.ஜ.க.வுடன் தோழமையாக இருந்தோம்; இப்போது எதிரி கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்'' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பா.ஜ.க.வோடு ஒரு காலத்தில் தோழமையாக இருந்த அ.தி.மு.க. தற்போது எதிரி கண்ணோட்டத்தோடு பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பேட்டியளித்த ஜெயகுமார், தங்கள் கூட்டணியில் இருந்து யாரும் அ.தி.மு.க.விற்கு போய்விடக்கூடாது என்பதற்காகவே தி.மு.க. விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.
Comments