இந்தியா-மாலத்தீவு இடையே 2 வது சுற்று பேச்சுவார்த்தை.... அரசு முறையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கு ஒப்புதல்
இந்தியா-மாலத்தீவு இடையே அரசு முறை ஒத்துழைப்புக்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இருநாடுகளின அதிகாரிகள் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மனிதாபிமான உதவிகளை வழங்க , இந்திய விமானங்களை இயக்குவதற்கு மாலத்தீவு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மார்ச் 15ம் தேதிக்குள் இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முகமது முர்சு அறிவித்துள்ளது குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதையடுத்து மே மாதம் 10ம் தேதிக்குள் இந்தியா தனது படைகளை மாலத்தீவில் இருந்து திரும்பப்பெறும் என்றும் படைகளை மாற்றிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் 3வது சுற்றில் தொடரும் என்றும் மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.
Comments