போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் அவதி...
ஜெர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
15 மாகாணங்களில் 130 நகராட்சி பொதுப் போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ந்த 90 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.
அந்நாட்டில் சில தினங்களுக்கு முன் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் வியாழனன்று விமான நிலைய பாதுகாவலர்களின் வேலைநிறுத்தத்தால் 1,100 விமான சேவைகள் ரத்தாயின.
போக்குவரத்து நிறுவனங்களின் புதிய விதிமுறைகளை கண்டித்து இப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Comments