காஸாவில் அடுத்த 2 வாரங்களில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரலாம் என கத்தார் அரசு நம்பிக்கை
காஸாவில் அடுத்த 2 வாரங்களில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரலாம் என கத்தார் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாட்டு பிரதநிதிகள், இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகளை பாரிஸில் வைத்து சந்தித்தனர்.
எஞ்சியுள்ள பிணைய கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், காஸாவில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் தரப்பிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு இஸ்ரேல் அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், ஹமாஸும் ஓரளவுக்கு ஒத்துக்கொண்டதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments