தலைநகர் டெல்லியில் பல மாதங்களுக்குப் பிறகு ஓரளவு தூய்மையான காற்றை டெல்லி மக்கள்

0 595

தலைநகர் டெல்லியில் பல மாதங்களுக்குப் பிறகு ஓரளவு தூய்மையான காற்றை டெல்லிவாசிகள் சுவாசித்தனர்.

கடந்த இரு தினங்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதாலும், காற்று பலமாக வீசுவதாலும், பல வாரங்களாக நகரைச் சூழ்ந்திருந்த காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி டெல்லியில் காற்று மாசு தரக்குறியீடு சராசரியாக 177 என்ற நிலையில் இருந்ததாகவும், கடந்த ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைவான காற்று மாசு தரக்குறியீடு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments