தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்க கிரீஸ் அரசு முடிவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு
கிரீஸில், தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதுவரை பல்கலைக்கழகங்களை அரசே இலவசமாக நடத்திவந்த நிலையில், முதன்முறையாக, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் கிளைகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்க கிரீஸ் அரசு முடிவெடுத்துள்ளது. கல்வியை தனியார் மயமாக்கக்கூடாது எனக்கூறி மாணவ அமைப்புகள் கண்டன பேரணிகளை நடத்திவருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக பேராசியர்களும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
Comments