ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்கிறார் சம்பய் சோரன்
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பய் சோரன் இன்று பதவி ஏற்க உள்ளார். அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க சம்பய் சோரனுக்கு ஆளுநர் பத்து நாள் அவகாசம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் ஹேமந்த் சோரன், முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, புதிய முதலமைச்சராக சம்பய் சோரன் அறிவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலுடன் ஆளுநரைச் சந்தித்த சம்பய் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.
Comments