சோறு போடாம கொன்னுபுட்டாங்க.. மேயர் மருமகள் சாவில் மர்மம் உறவினர்கள் புகாரால் பரபரப்பு ..! புகையிலையால் உயிரிழப்பு என்கிறார் மேயர்

0 1130

சேலம் மேயர் ராமச்சந்திரனின் மருமகள் திடீரென உயிரிழந்த நிலையில் , அவருக்கு சோறுகூட போடாமல் கொடுமைப்படுத்தியதால் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றஞ்சட்டிய நிலையில்; வெற்றிலை பாக்கு புகையிலை போட்டதால் உயிரிழந்ததாக மேயர் விளக்கம் அளித்துள்ளார்

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மருமகள் சுதா மர்மமான முறையில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில் மேயர் கூறிய வினோத விளக்கம் தான் இது

திமுக வை சேர்ந்த ராமச்சந்திரன் சேலம் மாநகராட்சி மேயராக உள்ளார்.

இவரது மகன் சுதர்சன்பாபுவிற்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் சுதர்சன்பாபுவிற்கும் சுதாவுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் உடல் நக்குறைவு என கோரிமேட்டில் உள்ள இல்லத்தில் இருந்து சுதாவை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச்சென்றதாகவும் அவர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

தனது சகோதரியை மேயர் மகன் சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்தி கொன்று விட்டதாக சுதாவின் சகோதரர் குற்றஞ்சாட்டினார்

உடம்புக்கு முடியல என்று சொந்தகாரங்களுக்கு போன் செய்து விட்டு சகோதரியின் கணவர் சுதர்சனபாபு ஓடிவிட்டதாகவும், மருமகள் உயிரிழந்த நிலையில் மேயரும் வரவில்லை , மாமியாரும் வரவில்லை என்று உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்

உறவினர்கள் குற்றஞ்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள மேயர் ராமச்சந்திரன், தனது மருமகளுக்கு வெற்றிலைபாக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்ததாகவும் அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்

சேலம் அரசு மருத்துவமனை தரப்பில் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சுதா, சர்க்கரை நோய் மற்றும் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments