IRCTC டிக்கெட்டை ரத்து செய்ய முயன்றவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.1.8 லட்சம் அபேஸ்

0 807

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர், தனது பயணச் சீட்டை ரத்து செய்ய IRCTC இணையதளத்தில் For Help பகுதியில் இருந்த கைபேசி எண்ணுக்கு அழைத்துள்ளார்.

எதிர்முனையில் பேசியவர் வங்கி மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்ட நிலையில், ஸ்ரீதரனின் வங்கி கணக்கில் இருந்து 1.8 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது.

இது தொடர்பாக வடபழனி போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் IRCTC இணையதளத்தில் பதிவிடப்பட்டு இருந்த கைபேசி எண் ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்ததால், ஊடுருவல் நடைபெற்றதா என தீவிர விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments