சேலம் மாநகராட்சி மேயர் மருமகள் இறப்பில் சந்தேகம் - உறவினர்கள் போராட்டம்

0 754

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மருமகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..

மேயர் ராமச்சந்திரனின் மகன் சுதர்சன் பாபுவின் மனைவி சுதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றதில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு குவிந்த சுதாவின் உறவினர்கள், முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று போராட்டம் செய்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள சேலம் மேயர் ராமச்சந்திரன், தனது மருமகள் சுதாவுக்கு வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை போடும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் உடல் நலன் கெட்டு நலிவடைந்ததே மரணத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், எந்த விசாரணைக்கு தான் தயாராக இருப்பதாகவும் சேலம் மேயர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments