இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 1889

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிதார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை சமாளித்து வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது

image

அனைவருக்கும், அனைத்தும் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயணித்து வருகிறது

நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் நேரடியாக சென்றடையும் வகையில் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பாதையில் நாடு பயணித்து வருகிறது

ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் மூலம் அனைத்துத்துறைகளிலும் நாடு தன்னிறைவு பெற்று முன்னேறி வருகிறது

அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன

80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன

 மதச்சார்பின்மையை மக்களுக்கான அரசின் திட்டங்கள் மூலம் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது

சாதி, மத வேறுபாடுகள் இன்றி, திட்டங்களின் பயன்கள் அனைவரையும் நேரடியாக சென்றடைகின்றன

 சமூக நீதி அரசியல் கட்சிகளின் கோஷமாக உள்ள நிலையில், சிறந்த நிர்வாகத்தின் மூலம் அதை செயல்படுத்தி வருகிறோம்

யாருக்கு என்ன தேவை என்ன என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்

கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்

10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி நேரடி மானியம்

விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத் திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது

மீண்டும் எங்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்

அறுதிபெரும்பான்மையுடன் மீண்டும் எங்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் - நிதியமைச்சர்

image

புதிய கல்வி கொள்கை மூலம் கல்வியில் சீர்திருத்தங்கள்

கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம்

7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலை.

10 ஆண்டுகளில் 7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன

image

1.4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

சிறந்த நிர்வாகம் மற்றும் திட்டங்கள் மூலம், இந்திய இளைஞர்களிடம் பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது

1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

நால்வகை பிரிவினருக்கு முன்னுரிமை

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நாங்கள் மிக உயரிய முன்னுரிமை அளித்து வருகிறோம்

MSP தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது

குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது

ஏழைகளின் நலனே தேசத்தின் நலன்

ஏழை, எளிய மக்களின் நலனே தேசத்தின் நலன் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது

1.4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

திறன்மிகு இந்தியா திட்டத்தில் 1.4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன்

10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது

4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு

4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது

சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படுகிறது

பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரிப்பு

பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டங்களால் மகளிர் பயன் அடைந்துள்ளனர்

இதுவரை இல்லாத வளர்ச்சியை பெறவுள்ள இந்தியா

அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்திருத்தங்களை அரசு திட்டமிட்டு வருகிறது

அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி இருக்கும்

கிசான் திட்டத்தால் 11.8 கோடி விவசாயிகளுக்கு பலன்

பிரதமரின் கிசான் திட்டத்தால் 11.8 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்

பின் தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மாநில அரசுகளுடன் பணியாற்றுகிறோம்

நாடு முழுவதும் புதிய 3000 ஐடிஐ-கள்

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 3000 ஐடிஐ-களை ஏற்படுத்தியுள்ளோம்

image

54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்பாடு

திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் 54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது

சராசரி உண்மையான வருவாய் அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் உண்மையான சராசரி வருவாய் அதிகரித்துள்ளது

image

வளர்ச்சியை சாத்தியமாக்கிய ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் மூலம் வரி அடிப்படையிலான வளர்ச்சி மேம்படுத்தப்பட்டுள்ளது

1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள்

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்

1 கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலம் வீடு ஒன்றிற்கு தலா 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்

சூரிய மின் ஆற்றலுக்கான சாத்தியமில்லாத சமயங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்

image

5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்

அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் நாடு முழுவதும் கட்டப்படும்

image

பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் அதிகரிக்கப்படும்

மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்

image

மருத்துவக்கல்லூரிகளை அதிகரிக்க குழு

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்

டி.ஏ.பி. உரங்களிலும் நானோ தொழில்நுட்பம்

யூரியாவைத் தொடர்ந்து டி.ஏ.பி. உரங்களிலும் நானோ தொழில்நுட்பம் கொண்டுவரப்படும்

வேளாண் துறையில் கூடுதல் முதலீடுகள்

வேளாண்துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும்.

வேளாண் விளைபொருள், அறுவடைக்கு பிந்தையை நடவடிக்கைகளுக்கு கூடுதல் முதலீடுகள் மேற்கொள்ளப்படும்

கடல் உணவுப்பொருட்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது

கடல் உணவுப்பொருட்களின் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது

மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

1 கோடி பெண்கள் லட்சாதிபதியாகியுள்ளனர்

சுய உதவி குழு கடன் உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்கள் மூலம் 1 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆகியுள்ளனர்

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

ரூ.1 லட்சம் கோடி மூலம் வட்டியில்லா கடன்

50 ஆண்டுகளுக்கு ஐ.டி இளைஞர்களுக்கு கடன்

தொழில்நுட்பத்துறையில் உள்ள இளைஞர்களுக்கு கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.1 லட்சம் கோடி நிதி மூலம் 50 ஆண்டுகளுக்கு ஐ.டி இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்

image

3 கோடி வீடுகள் இலக்கை நெருங்கியுள்ளோம்

அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளன

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன

சரக்கு ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேக வழித்தடங்கள்

சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்

புதிதாக 1,000 விமானங்கள் வாங்க நிறுவனங்கள் ஆர்டர்

நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்க உள்ளன

10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது

image

பாதுகாப்புத்துறையில் ரூ.11,11,111 கோடி முதலீடு

பாதுகாப்புத்துறையில் முதலீடு 11.1%ஆக உயர்த்தி 11,11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்

பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.யில் 3.4%ஆக இருக்கும்

image

மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும்

 மின் வாகன உற்பத்திக்கு ஊக்கம்

மின்சார வாகன உற்பத்திக்கும், சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் ஊக்குவிக்கப்படும்

ரயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்படும்

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும்

image

பொருளாதார காரிடார் வளர்ச்சிக்கு உதவும்

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார காரிடார் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்

ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தான்

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் உடன் ஜெய் அனுசந்தான்(ஆராய்ச்சி) என்பதே மோடி அரசின் குறிக்கோள்

ஜூலையில் வளர்ச்சிக்கான விரிவான திட்டம்

ஜூலையில் நாட்டின் வளர்ச்சிக்கான விரிவான திட்டங்கள் அறிவிக்கப்படும்

வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்வு

10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்வு

image

நிதிப்பற்றாக்குறை 5.1%ஆக குறைக்கப்படும்

2024-25ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1%-க்குள் கட்டுப்படுத்தப்படும்

நேரடி வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதி நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுகிறது

வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி

லட்சத்தீவு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம்

மாலத்தீவு விவகாரத்தைத் தொடர்ந்து லட்சத்தீவு சுற்றுலாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம்

image

நேரடி & மறைமுக வரி விதிப்பில் மாற்றமில்லை

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

ஐ.டி ரிட்டர்ன் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது

புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வருமானம் வரையில் விலக்கு அளிக்கப்படுகிறது

இடைக்கால பட்ஜெட் என்பதால் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

இடைக்கால பட்ஜெட் என்பதால் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை

image

ரூ.44 லட்சம் கோடி செலவு

வரும் நிதியாண்டில் மத்திய அரசின் செலவு ரூ.44 லட்சம் கோடியாக இருக்கும்

image

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments