அமெரிக்காவில் சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு நேரிடும் தீமைகள் குறித்து நாடாளுமன்ற குழு தலைமையில் விசாரணை

0 757

சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு நேரிடும் தீமைகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு தலைமையில் நடைபெற்ற விசாரணையில் பேஸ்புக், எக்ஸ், டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தொலைக்காட்சி நேரலையில் நடந்த விசாரணையில் முதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பேசிய காணொலிகள் ஒளிபரப்பட்டன.

சமூக வலைத்தளங்களால் பிளாக்மெய்ல் கும்பல்களிடம் மாட்டிக்கொண்டு பணத்தை இழப்பது, பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, மன நிம்மதி இழந்து சிறு வயதிலேயே உயிரை மாய்த்துக்கொள்வது என அடுக்கடுககான புகார்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களுடன் அங்கு வந்திருந்த பெற்றோரிடம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் எழுந்து நின்று மன்னிப்பு கோரினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments