UNRWA-வில் ஹமாஸ் இயக்கத்தினர் ஊடுருவி உள்ளதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

0 657

பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட UNRWA என்ற ஐ.நா. அமைப்பில், ஹமாஸ் இயக்கத்தினர் ஊடுருவி உள்ளதால் அந்த அமைப்பை கலைத்து விடுமாறு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் நடத்திய தாக்குதலில், UNRWA ஊழியர்கள் 12 பேர் நேரடியாக பங்கேற்றதாக அவர் முன்னர் குற்றம் சாட்டி இருந்தார்.அதை தொடர்ந்து, பல நாடுகள் அந்த அமைப்புக்கு உதவுவதை நிறுத்திக்கொண்டன.

அந்த அமைப்பில் 13 ஆயிரம் பேர் பணியாற்றிவரும் நிலையில், அவர்கள் மூலமாகத் தான் காஸா மக்களுக்கு ஓரளவு உதவிகளை செய்ய முடிவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments