வருமான வரியில் புதிய முறையை தேர்வு செய்வோருக்கு இடைக்கால பட்ஜெட்டில் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என எதிர்பார்ப்பு

0 743

வருமான வரியில் புதிய முறையை தேர்வு செய்வோருக்கு இடைக்கால பட்ஜெட்டில் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய மற்றும் புதிய முறைகளில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரி செலுத்துவோரை வருமான வரித் துறை அனுமதித்து வருகிறது.

புதிய முறையில், ஆண்டு வருமானம் 7 லட்ச ரூபாய் வரை வரி இல்லை, அதற்குமேல் ஈட்டப்படும் வருமானத்திற்கு பல அடுக்குகளில் வரி செலுத்த வேண்டும்.

வரிவிலக்கு உச்ச வரம்பான 7 லட்சத்தை 8 லட்சமாக உயர்த்த நடுத்தர வருவாய் பிரிவினர் தரப்பில் இருந்து நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் அது நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என கருதப்படும் நிலையில், பழைய வருமான வரி முறையில் 80 சி பிரிவின் உச்சவரம்பு ஒன்றரை லட்ச ரூபாயில் இருந்து 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments