ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப மக்கள் சங்கல்பம் எடுக்க வேண்டும்: அண்ணாமலை

0 457

ஆட்சிக்கு வந்து 39 மாதங்கள் ஆன பிறகும் சட்டமன்ற தேர்தலுக்கு அளித்த 511 வாக்குறுதிகளில் 20-ஐக் கூட திமுக அரசு முறையாக நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் இடையே பேசிய அவர், 70 ஆண்டுகளாக மக்கள் பணத்தை உறிஞ்சி கொள்ளையடித்தால் தரமான கல்வி, சுகாதாரம் எப்படி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

அரசு ஊழியர் ஒருவர் 48 மணி நேரத்திற்கு மேல் சிறையில் இருந்தால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், 230 நாட்களாக புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பது ஏன் என்றும் அண்ணாமலை வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments