இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது லண்டன் நீதிமன்றம்
காப்பீடு பணத்துக்காக வளர்ப்பு மகனை கொலை செய்த வழக்கில் குஜராத் போலீசாரால் தேடப்பட்டுவந்த தம்பதிக்கு, சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக லண்டன் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
லண்டன் வாழ் தம்பதியரான கவல்ஜித்தும், ஆர்த்தியும், 2015 ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த ஏழை சிறுவனை தத்தெடுத்தனர்.
தங்கள் மகனை யாரோ கடத்தி சென்று விட்டதாக அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது காப்பீடு பணத்துக்காக அந்த தம்பதியரே சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
லண்டனுக்கு தப்பியோடிய தம்பதியை நாடு கடத்த இந்திய அரசு எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. லண்டன் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து பிரிவில் பணியாற்றியுள்ள அனுபவத்தை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கொக்கைன் கடத்தியபோது அந்த தம்பதி போலீசாரிடம் சிக்கினர்.
Comments